‘மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்’; கொரோனா பரிசோதனைக்கு பயந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வருவது இல்லை; கர்நாடக மந்திரி மாதுசாமி பேட்டி

சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி மாதுசாமி துமகூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
‘மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்’; கொரோனா பரிசோதனைக்கு பயந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வருவது இல்லை; கர்நாடக மந்திரி மாதுசாமி பேட்டி
Published on

துமகூரு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சமூக விலகலை சரியான முறையில் பின்பற்றுவது இல்லை. இதனால் நோய் பரவம் ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் தனியார் மருத்துவமனைகள், விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். மக்களும் முட்டாள்களாக இருக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் கொரோனா பரிசோதனை செய்கிறார்கள் என்று பயந்து, அங்கு வருவது இல்லை. அத்தகையவர்கள் மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நோய் முற்றி ஆபத்தான கட்டத்தை அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அத்தகைய ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் மருந்து கடையினர், டாக்டரின் அறிவுரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது. அவ்வாறு மருந்துகளை, சீட்டு இல்லாமல் வழங்கினால் அத்தகைய மருந்து கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com