முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் குற்றம்சாட்டினார்.
முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை
Published on

மும்பை,

காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அகலபாதாளத்திற்கு செல்லும் முதலீடுகள், வேலையில்லா திண்டாட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி நடைமுறைபடுத்துவதில் ஏற்பட்ட பெரும் தோல்வி போன்றவற்றால் மராட்டிய மக்கள் விரக்தி அடைந்த நிலையில் உள்ளனர்.

ஆலங்கட்டி மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு அக்கறை காட்ட மறுக்கிறது. ஊழல், அதிகரித்து வரும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளை மும்பை போன்ற நகர்ப்புற பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். சமானிய மக்களின் பிரச்சினையை பேசமறந்து, அரசு மிகப்பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவது என்பதையே வேலையாக செய்துகொண்டு இருக்கிறது. மொத்தத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் மாநிலத்தில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. இது விரக்தியடைந்த மராட்டியமாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com