ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டனர்

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே புறப்பட்டனர்
Published on

ஆரணி,

ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதி அருணகிரி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (வயது 35) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பகுதியில் அதே மாநிலத்தை சேர்ந்த பலர் தங்கியுள்ள்ளனர். தினேஷ் இங்கு நண்பர்கள் 15 பேருடன் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மே 3-ந் தேதியுடன் ஊரடங்கு முடிந்து விடும், அதன்பிறகு சொந்த ஊருக்கு புறப்படலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இதே நிலை மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் வாழ்க்கை நடத்திட முடியாது. இதுவரை கூட எப்படியே வியாபாரம் இல்லாமல் குடுபத்தை நடத்தி விட்டோம். இனி குடும்பம் நடத்திட முடியாத சூழ்நிலை உருவாகுவதால் இங்கு இருந்து வாழ்வததை விட சொந்த ஊருகே செல்லாம் என முடிவு செய்து புறப்பட்டனர். அவர்கள் கூறுகையில் நாங்கள் இங்கிருந்து நடந்தே வேலூருக்கு செல்கிறோம். தொடர்ந்து அங்கிருந்து அங்கு உள்ள எங்கள் சொந்த ஊர்க்காரர்களுடன் மினி வேனில் ராஜஸ்தான் மாநிலம் செல்கிறோம். அங்கிருந்து வாகன வசதி இல்லை எனில் நடந்தே செல்ல முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com