கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்டவைகள் கேட்டு 356 பேர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர், 12 மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், நீர் வடிகால் வாய்க்கால்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com