காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர்- காஞ்சீபுரம் கலெக்டர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர்- காஞ்சீபுரம் கலெக்டர்
Published on

நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தையல் எந்திரம்

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2,170 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 200 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான செவித்திறன் கருவியும், 21 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலியும், 4 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலியும், 22 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான தாங்கிகளும், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com