பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி- அம்பாள் உற்சவர் சிலைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத, சோடஷ பூஜைகளும், நெய்தீப, கற்பூரதீப மகா ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாள் சிலைகள் கொடிமரம் முன்பாக பல்லக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிம்மவாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (புதன்கிழமை) சேஷவாகனம், 14-ந் தேதி சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம், 15-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 16-ந் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 17-ந் தேதி மாலை 4 மணி முதல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடு, 18-ந் தேதி கைலாச வாகனம், 19-ந் தேதி தேரோட்டம் மற்றும் காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் ரதா ரோஹணம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20-ந் தேதி கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 21-ந் தேதி ரிஷபவாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு அடைகிறது. அதன்பிறகு 26-ந் தேதி திருத்தேர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையரும், கோவில் தக்காருமான முருகையன், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com