பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணை தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாநில துணை தலைவர் சதாசிவம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழ்வாணன், மயில்சாமி, மணல் வெங்கட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பச்சமுத்து, கண்ணன், ராமராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் பி.என்.குணசேகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.நாராயணன், செல்வம், வெங்கடாசலம், இரா.பார்த்திபன், பாண்டியன், தண்டபாணி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்புநாடார், மாவட்ட துணை செயலாளர் சத்திய சாமிநாதன், மாநில மாணவர் சங்க துணை செயலாளர் கே.எம்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜமணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரவி, சங்ககிரி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு சங்ககிரி பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் எடப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரவி, மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, நடேசன், நகர நிர்வாகிகள் பாலு, வைத்தி, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com