

சேலம்,
எண்ணெய் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் 2 முறைபெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்தன. தற்போது தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்தே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 84 ரூபாய் 95 காசுக்கு விற்றது. நேற்று 27 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 85 ரூபாய் 22 காசுக்கு விற்கப்பட்டது.
அதே போன்று நேற்று முன்தினம் 91 ரூபாய் 74 காசுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 97 காசுக்கு விற்பனை ஆனது. 93 ரூபாய் 71 காசுக்கு விற்பனையான பிரிமியம் பெட்ரோல் நேற்று 23 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 94 காசுகளுக்கு விற்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.