மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்

தமிழக மருத்துவ பணிகள் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி. அமைப்பு, பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.
மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்
Published on

மருந்தாளுனர் பணிக்கு மொத்தம் 229 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சித்தா பிரிவில் 148 இடங்களும், ஆயுர்வேத பிரிவில் 38 இடங்களும், ஓமியோபதி பிரிவில் 23 இடங்களும், யுனானி பிரிவில் 20 இடங்களும் உள்ளன. இவை தற்காலிக பணியிடங்களாகும்.

பார்மசிஸ்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பிரிவு பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் கேட்கப்பட்டள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com