சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மாத்திரைகள் வினியோகம்

காமயகவுண்டன்பட்டி சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டது.
சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மாத்திரைகள் வினியோகம்
Published on

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காய்ச்சல் குணமாவதால் பொதுமக்கள் சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற விரும்பி செல்கின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவிலும் நோயாளிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டியில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து காமயகவுண்டன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோரிக்கை

இதில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் சையது சுல்தான் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் கொண்ட பெட்டகத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் முருகன், சிராஜ்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவில் சர்க்கரை நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மாத்திரைகளை வினியோகம் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் டாக்டர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com