

அரியலூர்,
ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பஸ் நிலையம், தேரடி, சத்திரம் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் துணிப்பைகளை வழங்கினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன், நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, உதவிப்பொறியாளர்கள் பிரபாகரன், இளமதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.