வேப்பனப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது

வேப்பனப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி பலாத்கார வழக்கில் தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது
Published on

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பிளஸ்-1 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவன் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளான். கடந்த 22-ந் தேதி அந்த மாணவனும், மாணவியும் வேப்பனப்பள்ளி பஸ் நிலையம் அருகே இருந்தனர்.

அப்போது அங்கு மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (வயது26), பட்டதாரி வாலிபரான திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (22) ஆகியோர் குடிபோதையில் வந்தனர். அவர்கள் அந்த மாணவியிடம் நைசாக பேசி, குளிர்பானத்தில் மது கலந்து குடிக்க வைத்துள்ளனர்.

தலைமறைவான 2 பேர் கைது

அப்போது அந்த மாணவியின் காதலனான பிளஸ்-1 மாணவன், அவனது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். இது குறித்து அந்த மாணவியின் தாயார் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-1 மாணவனை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவான ராஜா, மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com