கள்ளக்குறிச்சியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா.

பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா.
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அரிகிருஷ்ணன்(வயது 16), நிவேதா(16). இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். சோமண்டார்குடியில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அரிகிருஷ்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் 2 நாட்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவி நிவேதாவை சிலர் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தக்கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நாராயணன், இளைஞரணி மாநில துணை செயலாளர் தமிழரசன், நகர செயலாளர் மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com