மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் ஓய்வு எடுக்கும் அறை, கைதிகளை அடைக்கும் அறை, கழிவறைகளை சுற்றி பார்த்து அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு
Published on

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திடீரென மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவரை மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வரவேற்றனர். பிறகு மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் ஓய்வு எடுக்கும் அறை, கைதிகளை அடைக்கும் அறை, கழிவறைகள் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்து அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார்.

போலீஸ் நிலையத்தை சுகாதாரமான முறையில் வைத்திருந்ததை கண்டு அவர் அங்கு இருந்தர்களை பாராட்டினார். பின்னர், கடந்த ஒரு வருடமாக செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மாமல்லபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி வழக்குகளை நுண்ணறிவுடன் திறம்பட செயல்பட்டு கண்டுபிடித்ததற்கும், குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததற்கும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசாரை பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார். அவருடன் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com