

ஆவடி,
திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் முதல் தெருவில் வசித்து வந்தவர் மணி (வயது 50). இவர், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏட்டு மணிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருடைய மனைவி ஜெயந்தி, அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.