திருப்பூர் மாவட்டத்தில் 94.9 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருப்பூர் மாவட்டத்தில் 94.9 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 94.9 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
Published on

திருப்பூர்,

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.

இதற்காக மாவட்டத்தில் 1,154 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அமைச்சர்

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள், 23 போக்குவரத்து முகாம்கள் ஆகியவற்றில் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பணிக்காக பல்வேறு துறையை சேர்ந்த 4 ஆயிரத்து 922 பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 269 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

94.9 சதவீதம்

மாவட்டத்தில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 15 ஆயிரத்து 708 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 94.9 சதவீதம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com