பொள்ளாச்சியில்: தனியார் நிறுவன ஊழியர் கொலை; 7 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சியில்: தனியார் நிறுவன ஊழியர் கொலை; 7 பேர் கைது
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச்சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர்.

சம்பவத்தன்று ஆனந்தன் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு மதுக்கடை பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது குடித்துக்கொண்டிருந்த அவரது நண்பர் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டைச்சேர்ந்த சதீஸ்குமார், (33) என்பவரிடம் மீண்டும் மது குடிக்க ஆனந்தன் பணம் கேட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதனை பார்த்ததும் அங்கிருந்த சதீஸ்குமாரின் நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து கொண்டு ஆனந்தனை தாக்கினர். இதில் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து சதிஷ்குமார் உள்பட 7 பேரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் ஜமீன் ஊத்துக்குளி மயானம் அருகே கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸ் படையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

பொள்ளாச்சி பகுதியைச்சேர்ந்த அம்மான் என்கிற சிவமூர்த்தி (39), சதீஸ்குமார்(33), வின்சென்ட் (26), குட்டப்பன் (30), காளிதாஸ் (25), கண்ணன் (19) மற்றும் 18 வயதுடைய ஒருவர் என மொத்தம் 7 பேர் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com