வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா வலியுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா வலியுறுத்தல்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

புத்தாக்க பயிற்சி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்திடும் பெருட்டு 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள 7 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜேலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகள், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள 7 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் வேட்பு மனுக்கள் பெறுதல், மனுக்கள் பரிசீலனை, நிராகரித்தல், திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரித்தல், சின்னம் ஒதுக்கீடு செய்தல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் கலெக்டர் பேசியதாவது:-

தயார் நிலையில்

4 நகராட்சிகளில் 126 வார்டுகளுக்கு 299 வாக்குச்சாவடி மையங்களையும், 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டுகளுக்கு 48 வாக்குச்சாவடி மையங்கள் என மெத்தம் 171 வார்டுகளுக்கு 347 வாக்குச்சாவடிகளை தயார்நிலையில் வைத்துக்கெள்ள வேண்டும். மேலும் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கெள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களையும் தயார் நிலையில் வைத்துக்கெள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் செல்வன், ஹரிஹரன், நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராமராஜா, பழனி, ஸ்டான்லிபாபு, ஷகீலா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், நந்தகுமார், குருசாமி, நகராட்சி பெறியாளர்கள் ராஜேந்திரன், உமாமகேஷ்வரி, கேபு உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com