மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - கலெக்டர் ராமன் தகவல்
Published on

சேலம்,

சேலம், பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் வரவேற்று பேசினார்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் பொதுமக்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட உதவியாக இருக்கும். சேலம் மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 8 ஆயிரத்து 909 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேலும் 9 லட்சத்து 47 ஆயிரத்து 865 ஆண்களுக்கு வேட்டி, 9 லட்சத்து 47 ஆயிரத்து 845 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுபடாமல் வருகிற 12-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

விடுபட்டவர்களுக்கு 13-ந் தேதி வழங்கப்படும். மக்கள் ஒரே நேரத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்க தினமும் காலை 100 பேருக்கும், மாலை 100 பேருக்கும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி கலெக்டர் மாறன், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் வெங்கடாசலம், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் குபேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சரவணன், தியாகராஜன், யாதவமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com