திருவள்ளூரில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா; அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் பங்கேற்பு

Published on

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் செவ்வை ஜெயபால், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செவ்வை சம்பத்குமார், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை வழங்கினார்கள்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 81 ஆயிரத்து 924 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர்கள் மணவாளநகர் கே.இ.நடேச செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 பயிலும் 237 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com