பொன்னேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர் அருகே காளாஞ்சி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இறால் பண்ணை அமைத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 10 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன்மீது வருவாய்த்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
பொன்னேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

பொன்னேரி,

பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த 72 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அவர்களுக்கு இதுவரையிலும் வீட்டுமனை வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னேரி பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மீஞ்சூர் பகுதி செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். பொன்னேரி பகுதி செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரராஜன், மாவட்ட விவசாய அணிசெயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயன், விநாயகமூர்த்தி, ஹனிப் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் பேரணியாக கோட்டாட்சியர் அலுவலத்துக்கு சென்று வருவாய் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கோட்டாட்சியர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட அவர், அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com