புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
Published on

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள ஏலாக் குறிச்சியில் கிறிஸ்தவ தலங் களில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், வீரமா முனிவரால் கட்டப்பட்டதுமான புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குத்து விளக்கு பூஜை நடை பெற்றது. பங்கு தந்தை சுவக்கின் தலைமை தாங்கினார். திருமானூர் பங்கு தந்தை பெல்லார்மின் முன்னிலை வகித்தார். உதவிப்பங்கு தந்தை திமோத்தி வரவேற்றார்.

குடந்தை ஆயர் அந்தோணிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜையை தொடங்கி வைத்து, திருப்பலி நடத்தினார். அப்போது, அவர் கூறும் போது மக்கள் மனதில் உள்ள இருளை போக்கவும், உலகில் உள்ள இருளை போக்கவும், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மேன்மையடையவும், மக்களின் துன்பங்கள் நீங்கி அனைவரும் ஒற்றுமையுடன் இன்புற்று வாழவும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் பெருக்கவும், மக்கள் அனைத்து நன்மைகளைபெறவும் இந்த குத்துவிளக்கு பூஜை நடை பெறுகிறது என்றார். திரளான கிறிஸ்தவர்கள், வெளிநாட்டு பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com