

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி அரை நிர்வாண நிலையில் இருப்பது போன்ற ஆபாச புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.