

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
கடந்த மாதம் 24-ந்தேதி நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தேசிக்கப்பட்ட பெங்களூரு- சென்னை விரைவு சாலை திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி சாலை கட்டுமான திட்டத்திற்காக வருகிற 26-ந்தேதி காலை 11 மணியளவில் மப்பேடு - கீழச்சேரி சந்திப்பு பகுதியான கீழச்சேரி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம நடைபெறுவதாக இருந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.