கொட்டும் மழையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், திருச்சி கோட்ட கூட்டுக்குழு ஆகியோர் இணைந்து காந்தி பூங்கா முன்பாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொட்டும் மழையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஜெயங்கொண்டம்,

ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்க கோட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர் வினாயகமூத்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி கண்மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கமலேஷ் சந்திரா பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும்.

குழந்தைகளின் படிப்பிற்காக ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி, கங்கைகொண்டசோழபுரம், வரதராஜன்பேட்டை, கல்லாத்தூர், வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமிய தபால் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com