தஞ்சை விமானப்படை நிலையத்தின் புதிய தளபதியாக பிரஜூவல்சிங் பொறுப்பேற்பு

தஞ்சை விமானப்படை நிலையத்தில் புதிய தளபதியாக பிரஜூவல்சிங் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை விமானப்படை நிலையத்தின் புதிய தளபதியாக பிரஜூவல்சிங் பொறுப்பேற்பு
Published on

தஞ்சாவூர்,

தென்னக விமானப்பிரிவின் கீழ் இயங்கும் முதன்மை தளமாக தஞ்சை விமானப்படை நிலையம் திகழ்ந்து வருகிறது. இந்த விமானப்படை நிலையத்தின் தளபதியாக இருந்த விக்ரம்ஜித்சிங் மாற்றப்பட்டு புதிய தளபதியாக பிரஜூவல்சிங் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று தஞ்சை விமானப்படை நிலைய தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். முன்னதாக விமானப்படை நிலையத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைக்குப்பின்னர் அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

வாயுசேனா விருது

பிரஜூவல்சிங், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் 1992-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். தகுதி பெற்ற விமான பயிற்சியாளரான இவர் இயக்கம், நிர்வாகம் மற்றும் சூரிய கிரண், விமான சாகச அணி என பல்வேறு பிரிவுகளில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் ராணுவ, விமானப்பிரிவு அலுவலராகவும் பணியாற்றி உள்ளார். இவருடைய அர்ப்பணிப்பு பணிக்காக இவருக்கு 2012-ம் ஆண்டு வாயுசேனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com