பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால், விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம் பொதுமக்களுக்கு அனுமதியில்லை
Published on

நாசரேத்,

நாசரேத் அருகில் உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பெருவிழா வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது. இதை முன்னிட்டு ஜெபமாலை, கொடியேற்றம் நவநாள் திருப்பலி நடந்தது.

மறையுரை

தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா தலைமை தாங்கி கொடியேற்றினார். பங்குத் தந்தை அந்தோணி இருதய தோமாஸ் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட தந்தை லியோ ஜெயசீலன், பிரகாசபுரம் சேகரகுரு ஜெபவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது.

14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 9-ம் திருவிழா காலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். 15-ந்தேதி (சனிக்கிழமை) 10-ம் திருவிழா காலை 6 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி நடக்கிறது. தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி மறை மாவட்ட தந்தை மணி மறையுரை ஆற்றுகிறார். அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com