ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு தேவாலயங்களில் பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு தேவாலயங்களில் பிரார்த்தனை
Published on

கரூர்,

2017-ம் ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி கரூரில் புனித தெரசம்மாள் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பாதிரியார்கள் நற்செய்தி வழங்கினர்.

புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். மேலும் தேவாலய வளாகத்தில் இளைஞர்கள் பலர் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் பல இடங்களில் வெடிக்கப்பட்டன.

போலீஸ் சூப்பிரண்டு

கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரில் போலீசார் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கலந்து கொண்டு கேக் வெட்டினார். மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்களும் போலீசாருக்கு வாழ்த்துக்களை கூறினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண சாமி கோவில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரா கோவில், வெண்ணைமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

ரூபாய் நோட்டு அலங்காரம்

இதேபோல் அரவக்குறிச்சியில் உள்ள மகா மாரியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், ஈசநத்தம் ஈஸ்வரன் கோவில், மலைக்கோவிலூர் சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரவக்குறிச்சி சி.எஸ்.ஐ. தேவாலயம், ஆர்.சி.தேவாலயம் ஆகிய இடங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

லாலாப்பேட்டை கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

உப்பிடமங்கலம், நொய்யல்

உப்பிடமங்கலத்தில் உள்ள கிளிசேர் மொழிமங்கை உடனுறை அடியார்க்கு எளியர் சிவன் கோவில், லிங்கத்தூர் சிவன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில், புலியூர் வியாகபுரீஸ்வரர், ராசாகவுண்டனூர் ஜலகண்டமுனீஸ்வரர் உள்பட உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கரியம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்பட நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

குளித்தலை மகா மாரியம்மனுக்கு நேற்று சமயபுரம் மாரியம்மன் அலங் காரம் செய்யப்பட்டு இருந் தது. மேலும் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர், நீலமேகப்பெருமாள், அய்யப்பன், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட குளித்தலை மற்றும் அதை சுற்றி பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் அந்ததந்த ஊர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் இக்கோவில்களுக்கு சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் தாங்கள் வாங்கிய புதிய வாகனங்களை கோவிலுக்கு கொண்டுவந்து பூஜை செய்தனர். இதுபோல் குளித்தலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு குளித்தலை பகுதியில் பல்வேறு தெருக்களில் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com