வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காஞ்சீபுரம் கலெக்டருடன் மத்திய குழுவினர் கலந்தாய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காஞ்சீபுரம் கலெக்டருடன் மத்திய குழுவினர் கலந்தாய்வு கூட்டம்
Published on

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழு துணை ஆலோசகர் நவல் பிரகாஷ், சார்பு செயலர் பங்கஜ்குமார், இணை ஆலோசகர் அனுஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறையினர் மத்திய குழுவிடம் விவரித்தனர்.

இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், தூர்வாரி சீரமைத்தல் மற்றும் மழைக்காலங்களில் நீர் வெளியேறிட மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்திய குழுவினர் ஆலோசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து படப்பை, அடுத்த ஆதனூர், சோமங்கலம், வரதராஜபுரம் நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது சீரமமைக்கப்பட்ட பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக்குழு துணை ஆலோசகர் நவல் பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com