அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பிரேமலதா பேச்சு

அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பிரேமலதா பேச்சு
Published on

புதுக்கோட்டை,

திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநில அரசும், மத்திய அரசும் இந்த கூட்டணியில்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் வருகிற அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டணியே தொடரும். இந்த கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதனால் தான் அவரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணித்து உள்ளனர். இந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூறமுடியுமா?.

சாதிக்பாட்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார் என்று ஸ்டாலின் தெளிவான பதில் கூறிவிட்டு, கோடநாடு குறித்து அவர் பேசட்டும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஊழல் செய்வதிலும், ஏமாற்றுவதிலும் தான் வலிமையான கூட்டணி. அது மக்களை ஏமாற்றும் கூட்டணி. எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கேப்டன் நன்றாக இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com