பழனியில் விளைபொருள் இருப்பு மையம் அமைக்கப்படும் அ.தி.மு.க வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி

பழனி பகுதி விவசாயி களிள் வருமானம் இரட்டிப்பாக விளை பொருள் இருப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி அளித்துள்ளார்.
பழனியில் விளைபொருள் இருப்பு மையம் அமைக்கப்படும் அ.தி.மு.க வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி
Published on

பழனி,

பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ரவிமனோகரன் போட்டியிடு கிறார். இவர் பழனி, கொடைக்கானல் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் பழனி நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

பழனி நகரின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாயத் துக்கு ஆதாரமாக உள்ள வையாபுரிகுளத்தை பாது காக்க சிறப்பு திட்டம் அமல் படுத்தப்படும். குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றப்படும். குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைப்பதுடன், மக்களின் பொழுது போக்குக்காக பூங்கா அமைக்கப்படும். பழனி பஸ்நிலையத்தில் இருந்து மலைக்கோவில் வரை மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

பழனி என்பது விவசாயம் சார்ந்த பூமியாகும். இங்கு தேங்காய், கொய்யா மற்றும் காய்கறி பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப் படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் அதிகமாக வரத்து உள்ள நேரங்களில் விவசாயிக்கு போதிய விலை கிடைப்பதில்லை.

எனவே தேங்காய், கொய்யா மற்றும் காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைத்து, அதிக விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய இருப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனி அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். இவர்களின் வருமானத்தை அதிகரிக்க நிலையான வியாபார அமைப்பு ஏற்படுத்தப்படும். பழனி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனிமாவட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பழனியில் விவசாயம், மருத்துவம், சட்டக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனி, கொடைக்கானல் சுற்றியுள்ள கிராமத்தில் சாலை, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளை கண்டறிந்து அங்கு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுப்பேன். மேலும் மக்கள் எளிதாக தொடர்பு கொண்டு குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பபேன். இதற்காக பழனி, கொடைக்கானலில் குறைதீர்க்கும் மையங்கள் அமைக்கப்படும்.

பழனி-கொடைக்கானல் இடையே ஒரே ஒரு மலைப்பாதைதான் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விரைவில் கூடுதல் மலைப்பாதை அமைத்து போக்குவரத்தை நெறிப்படுத்தி கொடைக்கானலின் வளர்ச்சி மேம்படைய செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com