சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

காஞ்சீபுரம்,

சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் நகர தி.மு.க. சார்பில், நேற்று காலை காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் நகர தி.மு.க. செயலாளர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

இதில், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், ஆகியோர் கலந்து கொண்டு, சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தியதை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் அன்பழகன், தி.மு.க. நிர்வாகி ஏ.எஸ்.முத்துசெல்வம், காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் தி.மு.க. சார்பில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மறைமலைநகர் நகர தி.மு.க.வினர் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் நகர தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் அன்புசெழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்போரூர் பேரூர் தி.மு.க. செயலாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார்.

மேலும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் செங்கல்பட்டு நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர தி.மு.க. செயலாளர் நரேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க.செயலாளர் மனோகரன் தலைமையில் குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரியை உயர்த்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

இதில் குன்றத்தூர் பேரூர் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் சண்முகானந்தன், முருகன், எம்.இ.முனுசாமி, வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் எம்.ஜி.மனோகரன், வி.வி.என்.பிரேம்விசுவநாதன், வெ.அரிதாஸ் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் பன்னீர்செல்வம், தொழிலாளர் அணி அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி.கே.பாபு, ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், கூளூர் ராஜேந்திரன், கிறிஸ்டி என்கிற அன்பரசு, மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் மோதிலால், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.

பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார். இதில் சொத்து வரியை உயர்த்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com