

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி தொழிலை பாதுகாக்க ஜவுளி பாதுகாப்பு கழகத்தை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.