

மயிலாடுதுறை:-
தமிழகத்தில் புதிய ரெயில் பாதைகளை உடனடியாக அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் விமல், முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ், நகர செயலாளர் (கிழக்கு) கமல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் (மேற்கு) குமரேசன் வரவேற்று பேசினார். திண்டிவனம்-நகரி, மயிலாடுதுறை- தரங்கம்பாடி உள்ளிட்ட ரெயில்வே பாதைகளை உடனடியாக அமைக்க வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை- திருச்சி இடையே இருவழி ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் தங்க.அய்யாசாமி, மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் பாக்கம் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வடிவேல் நன்றி கூறினார்.