சங்கரன்பந்தலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சங்கரன்பந்தலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரன்பந்தலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Published on

பொறையாறு,

பொறையாறு அருகே இலுப்பூர், சங்கரன்பந்தல், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி சங்கரன்பந்தல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட ஜமாத்துல் உலமாக்கள் சபை செயலாளர் தலைமை இமாம் சாகுல் ஹமீது ரஹ்மானி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை மாநில பொதுச் செயலாளர் அன்வர் பாஷா, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் சுந்தரவள்ளி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் பேசினர். இதில் நாகை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நிவேதா முருகன், தரங்கம்பாடி வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து முஸ்லிம்ஜமாத் கூட்டமைப்பினர் மற்றும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக இலுப்பூர், சங்கரன்பந்தல், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளை சார்ந்த ஜமாத்தார்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து சங்கரன்பந்தல் கடைத்தெருவை அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com