

விருத்தாசலம்,
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி, நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம், முன்னாள் நகரமன்ற தலைவர் வ.க.முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேலு, மாவட்ட பசுமைத்தாயகம் செயலாளர் ஆசா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி
இந்த போராட்டத்தில் நகர செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், ராஜ்குமார், கோபி, மாவட்ட துணை செயலாளர் செந்தில், மாநில மாணவரணி துணை தலைவர்கள் டாக்டர் சத்தியமூர்த்தி, தீனதயாளன், மாநில மாணவரணி துணை செயலாளர் சிவா, செல்வ மணிகண்டன், கோட்டேரி தமிழ், திட்டக்குடி பெரியவர் தனபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில இளைஞரணி துணை தலைவர் முருகன்குடி மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஞானவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில், அரிமா மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கடைவீதி வழியாக கண்டன கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்று விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முக்கிய நிர்வாகிகள் 5 பேரை மட்டும் மனு கொடுப்பதற்காக நகராட்சி அலுவலகத்துக்கு செல்ல அனுமதியளித்தனர். அதன்பிறகு பா.ம.க.வினர் நகராட்சி ஆணையாளர் பாண்டுவை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
சிதம்பரம்
கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஇட ஒதுக்கீடு கேட்டு சிதம்பரம் நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சசிக்குமார் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சவுந்திரபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் செல்வராஜ், பாட்டாளி தொழிற்சங்கம் வீரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசஞ்சீவி, மாநில துணை அமைப்பு செயலாளர் அருள்கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் திலீப்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஇட ஒதுக்கீடும் வழங்க கோரி கண்டன உரையாற்றினார்.
மனு கொடுத்தனர்
முன்னதாக மாநில துணை பொதுச்செயலாளர் முனைவர் அசோக்குமார் சிதம்பரம் காந்திசிலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை நடந்த பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்று நகராட்சி ஆணையாளர் அஜீதாபர்வீனை சந்தித்து இடஒதுக்கீடு கேட்டு மனு கொடுத்தனர். இதில் பசுமை தாயகம் அழகரசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், செல்வமகேஷ், மாநில ஊடகப்பிரிவு துணைத்தலைவர் சத்தியம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சவு.ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் கமல், சமூக நீதிபேரவை மகேந்திரன், மகளிரணி செம்பாயி, இளைஞரணி செயலாளர் திருமூர்த்தி ராஜன், நிர்வாகிகள் கர்ணாமூர்த்தி, காளிமுத்து, திருமூர்த்திராஜன், பாஸ்கர், வெள்ளூர்பாபு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் வழக்கறிஞர் ராஜவேல் நன்றி கூறினார்.
பண்ருட்டி-நெல்லிக்குப்பம்
வன்னியருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. பா.ம.க மாவட்ட செயலாளரும், பொறியாளருமான ரவிச்சந்திரன் தலைமையில் மாநில துணை தலைவர்கள் வைத்திலிங்கம், முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ஆறுமுகம், நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் மோகன், நகர செயலாளர்கள் வினோத், அய்யனார், ஒன்றிய செயலாளர்கள் ஹரிராமன், பன்னீர், செந்தாமரைக்கண்ணன், சிவகுமார், தங்கவேல், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நகராட்சி ஆணையாளர் பிரகாசை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி, சுஜாதா, விஜயபார்வதி, ரேகா, வினோதினி, ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதேபோல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரியிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மனு கொடுத்துச் சென்றனர்.