பெரும்பாறை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

பெரும்பாறை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரும்பாறை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
Published on

பெரும்பாறை,

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஒருவர் மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் ஜோதிபாஸ், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத், சாலை பணியாளர்கள் ஆகியோர் பொக்லைன் எந்திரம், டிராக்டருடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குப்பம்மாள்பட்டியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் வில்சன்தேவதாஸ் மற்றும் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் சந்திரமோகன் ஆகியோர் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com