விற்பனைக் குழுவில் இருப்பு வைக்கும் நெல்லுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு

விற்பனைக் குழுவில் இருப்பு வைக்கும் நெல்லுக்கு வங்கிகள் மூலம் பொருளட்டுக்கடன் வழங்க ஏற்பாடு செய்வது என காரைக்கால் விற்பனைக்குழு பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது
விற்பனைக் குழுவில் இருப்பு வைக்கும் நெல்லுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு
Published on

காரைக்கால்,

காரைக்கால் விற்பனைக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டரும், விற்பனைக் குழு தலைவருமான கேசவன் தலைமையில் நடந்தது. இணை வேளாண் இயக்குனரும், விற்பனைக் குழுவின் செயலருமான பி.முகம்மது தாசீர் வரவேற்றார்.

கூட்டத்தின்போது காரைக்கால் விற்பனைக் குழுவின் வருவாயை பெருக்குவது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின்போது உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 2 கிடங்குகளை ஒதுக்கி வியாபாரம் மேற்கொள்வது, மின்னணு எடை மேடைக்கான கட்டணத்தை உயர்த்துவது, காரைக்கால் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் விற்பனைக்குழு ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தீவிர சந்தை வரிவசூல் செய்வது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் விற்பனைக் குழுவில் இருப்பு வைக்கும் நெல்லுக்கு பொருளட்டுக்கடன் வழங்க ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகள் ஓய்வு இல்லம்

தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாயிகள் ஓய்வு இல்லத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்தும், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின்போது கூடுதல் வேளாண் இயக்குநர் மதியழகன், துணை இயக்குனர் கணேசன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் சாய்கீதாராணி ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக் குழு ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com