கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்
Published on

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்பு அவர் கூறியதாவது, நயினார்கோவில் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்று வீட்டிலேயே தனிமையாக இருக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சாமான்கள், பால் போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்வதுடன், அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகையால் பொதுமக்கள் அச்சமின்றி தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு குறிப்பாக கூலித் தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 மற்றும் மளிகை சாமான் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ. தலைமையில் யூனியன் தலைவர் வினிதா குப்புசாமி, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி மணிமன்னன், ஆனந்தி கரிகாலன், நயினார்கோவில் ஊராட்சி தலைவர் ஜோதிமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப துறை துணை செயலாளர் துரை கே.வினோத், ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், யூனியன் அலுவலர் சேதுராஜன் ஆகியோர் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com