

இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் நிலம் சம்பந்தமாக 70 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 25 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 15 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 78 மனுக்கள் என மொத்தம் 230 மனுக்கள் அளித்தன.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 88 வீதம் ரூபாய் 6 ஆயிரத்து 176 மதிப்பிலான காதொலி கருவிகளை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.