தாராபுரத்தில் வெளியாட்கள் வருவதை சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கும் பொதுமக்கள்

தாராபுரத்தில் வெளியாட்கள் வருவதை சோதனைச்சாவடி அமைத்து பொதுமக்கள் கண்காணித்து வருகின்றனர்.
தாராபுரத்தில் வெளியாட்கள் வருவதை சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கும் பொதுமக்கள்
Published on

தாராபுரம்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் திருப்பூர் மாவட்டத்திலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கிராம மக்கள் தங்கள் ஊர் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து, வெளியூர்காரர்கள் தங்கள் ஊர்களுக்குள் நுழைவதை தடுத்து வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்க சோதனை சாவடி அமைத்தனர்.

அதில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக வெளியாட்கள் உள்ளே வர தடை என்ற வாசகம் அடங்கிய பேனரை கட்டி வைத்தனர்.காலை நேரத்தில் மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் வெளியே சென்று வருகின்றனர். மற்ற நேரங்களில் சோதனை சாவடி மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.வெளியாட்கள் வருவதை தடுக்க இப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்று வடதாரை,காமராஜபுரம்,சுங்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் பகுதியில் சோதனைச்சாவடி அமைந்துள்ளனர்.வெளியாட்கள் உள்ளே வராமல் தடுக்க அப்பகுதி இளைஞர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.சோதனைச்சாவடியின் முன்பு மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைத்துள்ளனர். அதில் வெளியே சென்று வரும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் கைகள்,கால்களை கழுவிக் கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com