

நாகூர்:
ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் நேற்று பிரவேசித்தனர். இதை முன்னிட்டு நாகூர் நாகநாத சுவாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு ராகு பகவானுக்கு பரிகார சாந்தி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.