பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியவில்லை மீண்டும் வாய்ப்பு கோரி பிரதமருக்கு, குமாரசாமி கோரிக்கை

பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவ-மாணவிகள் கர்நாடகத்தில் நேற்று ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கோரி பிரதமருக்கு குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியவில்லை மீண்டும் வாய்ப்பு கோரி பிரதமருக்கு, குமாரசாமி கோரிக்கை
Published on

பெங்களூரு,

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகள் படிக்க விரும்புபவர்கள் தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2019-20-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். கர்நாடகத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த மாணவர்களின் வசதிக்காக கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, தார்வார், பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெங்களூருவில் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2 நாட்களுக்கு முன்பு அந்த தேர்வு மையம், ஓசூர் ரோட்டில் உள்ள தயானந்த்சாகர் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இதுபற்றி தகவல் தெரியாத மாணவர்கள், எலகங்காவில் உள்ள கல்லூரிக்கு வந்தனர். அங்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கிருந்து வாடகை கார் மூலம் அவசர அவசரமாக சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தயானந்த்சாகர் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அங்கு சில மாணவர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிப்பு பலகையில் இடம் பெற்று இருந்தது. அவர்களை மட்டுமே அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனா.

மற்ற மாணவர்களின் பெயர்கள் பெயர் பலகையில் இல்லை. இதனால் அவர்கள் அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் மதியம் 12-30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, மற்றொரு அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1-30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மாணவிகள் செயின், மூக்குத்தி, கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் போன்றவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவிகள் கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் அவற்றை பெண் போலீசாரிடம் கழற்றி கொடுத்தனர்.

மாணவிகள் தனி அறையில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். முஸ்லிம் மாணவிகள் தங்களது பர்தாவை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

மாணவர்கள் டீ-சர்ட், பெல்ட், கைக்கெடிகாரம், செயின், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் குறித்து மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com