சூறாவளி காற்றுடன் மழை: வாழைகள், பப்பாளி மரங்கள் சேதம் விவசாயிகள் வேதனை

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வாழைகள், பப்பாளி மரங்கள் சேதம் அடைந்தன.
சூறாவளி காற்றுடன் மழை: வாழைகள், பப்பாளி மரங்கள் சேதம் விவசாயிகள் வேதனை
Published on

திருமங்கலம்,

கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாகுளம், திருமங்கலம் ஒன்றியதிற்கு உட்பட்ட திரளி, ராயபாளையம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் வாழை, பப்பாளி, தேக்கு ஆகியவை பயிரிட்டுள்ளனர். இவைகளை தனித்தனியாக 10 ஏக்கரில் சாகுபடி செய்திருந்தனர். இதில் அறுவடை செய்யும் நிலையில் வாழைகள் இருந்தன. மேலும் வாழைகள் சாய்ந்து விழாமல் இருக்க கம்புகளால் முட்டு கொடுத்து பாதுகாத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறைகாற்றுக்கு தாங்காமல் வாழை மரங்கள், பப்பாளி, தேக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ராமகிருஷ்ணன் கூறும்போது, ஏக்கருக்கு 50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து 4 ஏக்கரில் வாழைகள் பயிரிட்டு இருந்தேன். இந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு தாங்காமல் சாய்ந்து விட்டன. இதற்கு அரசு நஷ்டஈடு வேண்டும். மேலும் இதே பகுதியை நாகஜோதிலட்சுமி, அன்னலட்சுமி, ராஜபாண்டி ஆகியோர் பயிரிட்டு இருந்த பப்பாளி, தேக்கு மரங்களும் சாய்ந்து விழுந்து விட்டன. வருவாய்த்துறை அதிகாரிகள், தோட்டகலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலூர்

இதேபோல் மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு, பப்பாளி மரங்கள் சாய்ந்தன. திருவாதவூர் அருகே டி.புதுப்பட்டியில் மணிகண்டன், உலகுபிச்சன்பட்டியில் சங்கர் மற்றும் ஒஞ்சி அம்பலம் என்பவர்களின் வீடுகளும் சேதமடைந்தன.

வெள்ளலூர், உரங்கான்பட்டி, தனியாமங்கலம், சருகுவலையபட்டி, கோட்டநத்தாம்பட்டி, அம்பலகாரன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வாழைமரங்கள், பப்பாளி மரங்கள், கரும்பு செடிகள் உள்ளிட்டவைகள் சாய்ந்து சேதமடைந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com