ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிப்பு
Published on

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை செவிலியர்கள் நோயாளிகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக சென்று நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் செவிலியர்கள், நோயாளிகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என நாடக வடிவில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பாதுகாக்கும் விதமாக, அனைவருக்கும் தனி அடையாளம் கொடுப்பது குறித்தும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான அளவில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அவ்வாறு வழங்கப்படும் மருந்துகளின் விவரங்கள் பட்டியலிடப்பட வேண்டும் என்பது குறித்து செவிலியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஒரு நோயாளிகளை பார்த்துவிட்டு அடுத்த நோயாளிகளை கவனிப்பதற்கு முன்னர் கைகளை கழுவும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com