ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெய்லானி காலனியில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி பைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா, வர்த்தக காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமை தாங்கி, ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் விரைவில் குணமடைய பிரார்த்தனை நடந்தது.

நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ஜெயக்கொடி, மடத்தூர் தனபால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாயர்புரம் மெயின் பஜாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவர் மணி தலைமை தாங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவ படத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com