ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன், மதுரை சிறையில் இருந்து பிரதமருக்கு எழுதிய கடிதம் “7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்”

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு, பிரதமர் மோடிக்கு மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன், மதுரை சிறையில் இருந்து பிரதமருக்கு எழுதிய கடிதம் “7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்”
Published on

மதுரை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் மூலமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நான் உள்பட 7 பேரும் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறோம். ஆனால், ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் அரசியல்வாதிகளை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளோம்.

ஏன் இந்த வழக்கில் மட்டும் பாரபட்சம் பார்க்கிறீர்கள்? ஒரே மக்கள், ஒரே இந்தியா, ஒரே தேசம் என்ற அடிப்படையில் நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். ஏற்கனவே எங்களை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி, கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளோம். வடமாநில குற்றவாளிகளை விடுவிப்பது போன்று எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.

இந்த கடித நகலை தமிழக கவர்னர், முதல்-அமைச்சருக்கும் சிறையில் இருந்து ரவிச்சசந்திரன் அனுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com