வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ராமேசுவரத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயில்

வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 20 பெட்டிகளுடன் ரெயில் ஒன்று நெல்லைக்கு புறப்பட்டு சென்றது.
வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ராமேசுவரத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயில்
Published on

ராமேசுவரம்,

கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலமாக அனுப்ப மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன.

அதை தொடர்ந்து மதுரையில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் பெட்டிகள் இல்லாமல் தனி என்ஜின் ஒன்று ராமேசுவரம் வந்தது. பின்னர் அந்த என்ஜினுடன் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பெட்டிகள் இணைக்கப்பட்டன.

நெல்லை புறப்பட்டது

தொடர்ந்து பகல் 11 மணி அளவில் 20 பெட்டிகளுடன் அந்த ரெயிலானது பயணிகள் யாரும் இல்லாமல் புறப்பட்டு பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து நெல்லை நோக்கி சென்றது. இந்த ரெயில் நெல்லை சென்ற பின்பு, அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று (சனிக்கிழமை) அல்லது நாளை பீகார் புறப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாம்பன் பாலத்தை ரெயில் கடந்து சென்ற காட்சியை மீனவர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com