மாநகராட்சிக்கு ரூ.23¼ லட்சம் அபராதம் செலுத்திய ராணி முகர்ஜி

வீட்டில் விதிமுறை மீறி சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்காக நடிகை ராணி முகர்ஜி மாநகராட்சிக்கு ரூ.23¼ லட்சம் அபராதம் செலுத்தி உள்ளார்.
மாநகராட்சிக்கு ரூ.23¼ லட்சம் அபராதம் செலுத்திய ராணி முகர்ஜி
Published on

மும்பை,

மும்பை ஜூகு பகுதியில் நடிகை ராணி முகர்ஜிக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இவரது வீட்டின் சீரமைப்பு பணி நடந்து வந்தது. இந்த நிலையில் சட்டவிரோதமாக நடிகையின் வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாக சமூகஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 25ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் நடிகையின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விதிமுறைகளை மீறி சீரமைப்பு பணிகள் நடந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சியினர் நடிகைக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதையடுத்து அவரது வீட்டின் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் விதிமுறை மீறி பங்களாவில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்காக நடிகை மாநகராட்சிக்கு ரூ.23 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளார். இந்த தகவலை மாநகராட்சி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். அபாரதம் செலுத்தியதை அடுத்து நடிகை மீண்டும் சீரமைப்பு பணிகளை தனது வீட்டில் தொடங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com