ராணி வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா அமைச்சர் மரியாதை செலுத்தினார்

ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராணி வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா அமைச்சர் மரியாதை செலுத்தினார்
Published on

சிவகங்கை,

தமிழக அரசு ராணி வேலுநாச்சியாரின் நினைவாக சிவகங்கையில் மனிமண்டபம் அமைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3-ந் தேதி அவருடைய பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த தினவிழாவையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன், மன்னர் குடும்பத்தின் சார்பில் இளைய மன்னர் மகேஷ்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கருணாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், ஆவின் பால்வளத் தலைவர் அசோகன், மாவட்ட மாணவர் அணிசெயலாளர் என்.எம்.ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கோபி, இளையான்குடி நில வங்கி தலைவர் பாரதிராஜன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜ், முன்னாள் யூனியன் தலைவர் மானாகுடி சந்திரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிக்குமார், பலராமன், ஜெயபிரகாஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் தலைமையில் ராணி வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தேர்போகிபாண்டி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் இரவுசேரி முருகன், வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் அன்பரசன், மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் அண்ணாமலை, இளைஞர் பாசறை செயலாளர் பூவந்தி ஆறுமுகம், பொறியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மகேஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் முத்து, மந்தகாளை, நகர் செயலாளர் அன்புமணி, அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com